விற்பனைக்கு வருகின்றது ஆர்சிபி அணி!! விபரங்கள் வெளியாகின

விற்பனைக்கு வருகின்றது ஆர்சிபி அணி!! விபரங்கள் வெளியாகின

ஐபிஎல் தொடரில் பிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விற்பனை செய்யப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணியை விற்பனை செய்வதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அணி நிர்வாகம் அறித்துள்ளது.

இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், அணிக்கு இரண்டு பில்லியன் டொலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் நடப்பு ஆண்டில் இடம்பெற்ற தொடரிலேயே ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

அணியின் வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் அந்த அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இவ்வாறான பின்னணியில் அணியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This