அலட்சியத்தால் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை

நாடு முழுவதும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) கவலை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் பாதுகாப்பற்ற அல்லது பழக்கமில்லாத இடங்களில் குளிப்பதே என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
நேற்று (5) சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொடையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அதன் ஆழம் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் தண்ணீரில் இறங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலேயே நான்கு பேர் இறந்தனர், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர்கள் 12 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பொலிஸின் உயிர்காக்கும் பிரிவு, இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர்வாசிகளால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
