கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது

கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது

அடுத்த ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு பின்னர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனிசனின் பொதுச் செயலாளர் கிறிஸ்டினா மெக்னீயா இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்கள் பிரதமருக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று பரவலாகக் கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மே மாதத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என நினைக்கின்றேன். தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து என்ன நினைப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது.

தேர்தல் முடிவுகளின் பின்னர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கிறிஸ்டினா மெக்னீயா  சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிற்கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே அண்மைய வாரங்களில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் கிறிஸ்டினா மெக்னீயாவின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இதனிடையே, மற்றொரு தொழிற்சங்கமான யுனைட், தொழிற்கட்சி தொழிலாளர்களின் பக்கம் இல்லை என்று குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, அடுத்த மே மாதம் நடைபெறும் வேல்ஸ் தேர்தல்களில் தொழிற்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதே நேரத்தில், ஸ்காட்லாந்தில் அது தோல்வியடையக்கூடும் எனவும், இங்கிலாந்து முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்களில் படுதோல்வியை சந்திக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளை மெக்கனீயா கடுமையாக சாடியுள்ளார்.  தற்போதைய ஆட்சியில் “நடந்து கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This