ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக உயர்வு, மேலும் 180 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக உயர்வு, மேலும் 180 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 180 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This