பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் வீடொன்றை, நேற்றையதினம் சோதனைக்குட்படுத்தியபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 104 கிலோ 660 கிராம் கேரள கஞ்சா கொண்ட 45 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
