சீதை அம்மன் கோவிலில் கொள்ளை சம்பவம் – ஆறு உண்டியல்கள் உடைப்பு

சீதை அம்மன் கோவிலில் கொள்ளை சம்பவம் – ஆறு உண்டியல்கள் உடைப்பு

நுவரெலியா, ஹக்கலவில் உள்ள சீதை அம்மன் கோவிலில் உள்ள ஆறு உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேடமான முறையில் தயாரிக்கப்பட்ட மூன்று பணப் பெட்டிகள் அருகிலுள்ள கால்வாயில் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகக் குழு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளது.

கோயிலின் பாதுகாப்பு கேமரா அமைப்பின் தரவு சேமிப்பு சாதனம் அகற்றப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

காவலர் தூங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் கோயிலுக்குள் நுழைந்து பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This