கொழும்​பிலிருந்து மும்​பைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் – பல கோடி ரூபா பெறுமதி

கொழும்​பிலிருந்து மும்​பைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் –  பல கோடி ரூபா பெறுமதி

இந்தியாவின் மும்​பை​ சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்​பிலிருந்து மும்​பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பெண் பயணி ஒருவர் உட்பட ஐவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுதொடர்பில் மத்​திய நிதி அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை தலைநகர் கொழும்​பிலிருந்து மும்​பைக்கு வரும் விமானத்​தில் கொகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக இரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, வரு​வாய் புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள், மும்​பை​யின் சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்த ஒரு பெண் பயணி​யின் உடமை​களை பரிசோ​தித்​தனர்.

இதன்போது 09 தேயிலை தூள் பக்கெற்றுகளில் மறைத்து வைத்​திருந்த கொகைன் போதைப் பொருளை பறி​முதல் செய்​தனர்.

சுமார் 4.7 கிலோ நிறையுடன் அதன் மதிப்பு 47 கோடி ரூபா ஆகும்.

கொகைன் கடத்தி வந்த பெண், அதை வாங்​கிச் செல்ல வந்த ஒரு​வர் உட்பட 5 பேரை அதி​காரி​கள் கைது செய்​துள்​ளனர்.

அவர்​கள் மீது போதைப்​பொருள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

சர்​வ​தேச போதை கடத்​தல் கும்​பல், அண்மை கால​மாக போதைப்​பொருளை கடத்த இந்​திய பெண்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர். குறிப்​பாக,  இதனைக் கண்​டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்​களுக்​குள் வைத்​து கடத்​துகின்​றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This