நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட சுற்றிவளைப்பில் மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மாத்திரம் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது 1 கிலோ 202 கிராம் ஐஸ், 863 கிராம் 137 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் குஷ் உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 31 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மேலும்
நால்வருக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 08 நபர்களை மறுவாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This