பிரித்தானியாவில் ரயிலில் கத்திக் குத்து தாக்குதல் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானியாவில் ரயிலில் கத்திக் குத்து தாக்குதல் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை அந்நாட்டு போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை பாரிய விபரீத சம்பவமாக அறிவித்துள்ள பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 7.39க்கு தாக்குதல் குறித்த முதல் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரயில் ஹண்டிங்டனில் நிறுத்தப்பட்டதாகவும், இதன் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், விரைந்து மீட்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டனர். ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் மூன்று விமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும், சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை “திகிலூட்டும்” சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சம்பவம் குறித்து “ஆழ்ந்த” கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைந்து செயப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவரச சேவை பிரிவுகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பொலிஸாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்,” என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் கிழக்கு கடற்கரை பிரதான ரயில் சேவைகளை இயக்கும் லண்டன் வடகிழக்கு ரயில்வே, அதன் ரயில்களில் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தியது.

 

Share This