
பல லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது
தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அங்கு அடையாளம் காணப்பட்ட கஞ்சா செடிகளை முற்றாக தீயிட்டு அழிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதேவேளை, சந்தேக நபரை வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
