நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை

நாடளாவிய ரீதியில் பேருந்துகளில் விசேட சோதனை

நாடளாவிய ரீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமையினால் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக, பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் அதிகளவில் விபத்துக்குள்ளாகி வரும் காரணத்தினால் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சிறப்பு சோதனை தொடங்கப்பட்டது.

போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கபட்டுள்ளது.

பேருந்து சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவது தொடர்பில் தகவல் கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This