அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஆனந்த விஜேபால

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுடன் இணைந்து அமைச்சர் விஜேபால, நேற்று மாலை இலங்கை ராமண்ண மஹா நிகாயவின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய மகுலேவே விமல தேரரை சந்தித்தார்.
ஒக்டோபர் 30 ஆம் திபதி முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் குறித்து தேரருக்கு விளக்கமளிக்க இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
பாதாள உலக நடவடிக்கைகளை அடக்குவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
