இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடியிருப்பாளர்களால் நில அதிர்வு உணரப்பட்டாலும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையெனவும் அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
