போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் கைதானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ அண்மித்தது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயினுடன் 59,243 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்புகளின் போது 2,542 கிலோ 454 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 67,762 பேரும் 582 கிலோ 136 கிராம்
ஹஷீஷ் போதைப்பொருளுடன் 1,444 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 14,434 கிலோ 468 கிராம் கஞ்சாவுடன் 59,482 பேரும், 32 கிலோ 642 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 86
பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 3,961,790 போதை மாத்திரைகளுடன் 2,921 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
