நெஞ்சில் டெட்டூ உடன் அஜித் , இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பின்னர் நடிகர் அஜித் குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார்.இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது.
டுபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர் அணி,பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்தில் அண்மையில் பங்கேற்றது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கோயிலில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அஜித் தன் நெஞ்சில் டெட்டூ ஒன்றை வரைந்துள்ளார்.
கடவுள் படம் போல தோற்றமளிக்கும் அது உண்மையான டாட்டூதானா? அல்லது அடுத்த படத்துக்காக தற்காலிகமாக வரையப்பட்டதா என இரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




