02 தேங்காய்களை திருடியதற்காக படுகொலை செய்தநபருக்கு மரண தண்டணை

02 தேங்காய்களை திருடியதற்காக படுகொலை செய்தநபருக்கு மரண தண்டணை

தேங்காய்கள் இரண்டை திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக சட்ட மா அதிபர் 2001 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

நியதகல பகுதியில் அமைந்துள்ள வயலில் இந்த குற்றச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கின் சாட்சியங்களை மதிப்பாய்வு செய்த நீதிபதி, இந்த வழக்கின் முதல் பிரதிவாதி மீது அரச தரப்பு முன்வைத்த கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர் கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Share This