
வெள்ளவத்தையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதியதில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் களுபோவில வைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
