போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் விருப்பத்துடன் புனர்வாழ்வு செயன்முறையை ஆரம்பித்து வைக்கையில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பணியகத்தின் முதல் தன்னார்வ புனர்வாழ்வு மையம் வெலிகந்த நவ சேனாபுர நவோதயா தொழிற்கல்வி
பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This