நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்து – கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டு பேர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்து – கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டு பேர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஏழு வீதி விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் வீதியில் உள்ள எரியகம பகுதியில் நேற்று வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, மரம் ஒன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்திலுள்ள மாதம்பே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் 52 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹாவில்,இடம்பெற்ற வாகன விபத்தில் 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, சுன்னாகம், மதவாச்சி மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மொத்தமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Share This