இந்தியாவின் ஏவுகணை நாயகனின் பிறந்த நாள் இன்று – நினைவு கூர்வோம் என மோடி பதிவு

இராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயற்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார்.
அவர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடுடையவர் இதனால் அவர்களோடு சுமுகமான முறையில் எப்போதும் உரையாடுவார்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்” என பதிவிட்டுள்ளார்.
அவரது பதவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இளைஞர்களை தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூறப்படுகிறார்.
வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை. வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்” என்று பதிவிட்டுள்ளார்.