ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் வந்தடைந்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியது

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் வந்தடைந்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியது

காசாவில் விடுவிக்கப்பட்ட முதல் ஏழு பணயக்கைதிகள்  இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இன்று விடுவிக்கப்பட்ட 20  பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

2023 ஒக்டோபர் 07 திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கமைய அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

பணயக்கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேல் 250 பலஸ்தீன கைதிகளையும் 1,700 க்கும் மேற்பட்ட கைதிகளையும் விடுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ப் விரைவில் இஸ்ரேலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சுமார் 20 உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டிற்காக எகிப்துக்கு ட்ரம்ப் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This