கல்கிஸ்ஸை சம்பவம்- பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் கல்கிஸ்ஸை நீதவான் இன்று (13.10) விடுவித்தார்.
இந்த வழக்கு விசாரணை நவம்பர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.