தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள்  1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள்  1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இந்த வருடத்துக்குள்  1,750 ரூபாவாக உயர்த்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பண்டாரவளையில் இன்று (12) இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

மலையக சமூகம் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதுடன், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறது.

அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

அவர்களுக்கு வீட்டு உரிமையை வழங்குதல் மற்றும் நியாயமான சம்பளத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அவர்கள் நீண்ட காலமாக 1,750 ரூபா தினசரி சம்பளத்தை கோரி வருகின்றனர், மேலும் இந்த ஆண்டுக்குள் அதை எப்படியாவது யதார்த்தமாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )