20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம்

20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம்

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு 03 வருடங்களுக்கும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.

மார்பகங்களில் கட்டிகள், மார்பகத்தின் தோல் மங்கலாகுதல், மார்பக வீக்கம், அசாதாரண வெளியேற்றம் அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்தப்போக்கு, மார்பகங்களில் வலி அல்லது தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் பெண்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )