மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீதிக்கு இறங்கி போராடுவோம் – சஜித்

நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் டி.எஸ். சேனநாயக்க அரசியல் கற்கைகள் பீடத்தின் திறப்பு விழா, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் இன்று (11) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது. மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தான் அந்த நற்செய்தியாகும்.
இந்த மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படக் கூடாது என்றே நாம் பிரார்த்திக்கிறோம். அரசாங்கம் ஏதோ ஒருவகையில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால், ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம், மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்.
இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்போம். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுப் பொருளாதாரத்தில் தாய்மார்களும் பெண்களும் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்.
அரசாங்கத்தின் இந்த மோசமான கொள்கைகளை தோற்கடிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.