இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன.

புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளன.

நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளைப் பெற்று 5 ஆவது மற்றும் 6ஆவது இடத்தை பிடித்துள்ளன.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டதால் இலங்கை மகளிர் அணி, புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தை பெற்றுள்ளது.

Share This