
மகாவலி கங்கையில் மூழ்கி காணாமற்போன மாணவன் சடலமாக மீட்பு
கண்டி, தென்னகும்புர பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி காணாமற்போன 02 மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மகாவலி கங்கையின் குருதெணிய பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று(10) காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
காணாமற்போன 13 வயதான மற்றைய மாணவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த 02 மாணவர்களும் நேற்று(08) முன்தினம் காணாமல் போயிருந்தனர்.
மகாவலி கங்கையில் இருவரும் இறங்கியதை கண்டதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
CATEGORIES இலங்கை
