அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மரியா கொரினா மச்சோடா – ட்ரம்பின் எதிர்பார்ப்பு தோல்வி

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்  மரியா கொரினா மச்சோடா – ட்ரம்பின் எதிர்பார்ப்பு தோல்வி

2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா
வென்றுள்ளார்.

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கான அவரது அயராத உழைப்பிற்காகவும் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும்” அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வெனிசுலாவில் ஜனநாயக சக்திகளின் தலைவராக, மச்சாடோ அண்மைய காலங்களில் லத்தீன் அமெரிக்காவில் பொதுமக்கள் துணிச்சலுக்கு மிகவும் அசாதாரண எடுத்துக்காட்டுகளில் ஒருவர்” என நோபல் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த விருதை எதிர்பார்த்திருந்ததுடன் பல உலக தலைவர்களும்
ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுருந்தன. இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பு
தோல்வியடைந்துள்ளது.

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Share This