தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து

தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து

தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கட்டிடம் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்கேயில் உள்ள ஹை ஸ்ட்ரீட்டில் இரண்டு மாடி கடையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து மதியம் 04:30 மணியளவில் பதினைந்து இயந்திரங்களும் 100 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தரைத்தளத்தின் ஒரு பெரிய பகுதி தீப்பிடித்து எரிந்ததாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

இதன்போது அருகில் இருந்து கட்டடங்களில் இருந்த 25 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புகை வராமல் இருக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு உள்ளூர்வாசிகள் வலியுறுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், பெக்கன்ஹாம், ஃபாரஸ்ட் ஹில், வுட்சைட், வெஸ்ட் நோர்வுட் மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த குழுவினர் காலை 9:00 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Share This