உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் கைது

உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் கைது

மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாத்தறை, வெல்லமடம பகுதியில் காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்த போதிலும்
உத்தரவை மீறி வாகனம் சென்றுள்ளது.

இதன்போது, பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பல முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனம், பின்னர் மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனத்தில் இருவர் பயணித்த நிலையில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This