பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா குறித்து எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர்
புலினா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.