ஹுங்கம கொலை சம்பவம் – நால்வர் கைது

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் தம்பதியினர் மீது கூரிய ஆயுத தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (07) காலை கைது செய்யப்பட்டதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான பிரதான சந்தேக நபர் அந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.
ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 12.45 அளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது.