
பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிப்பு
இந்தியாவின் பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டள்ளது.
இதன்படி, இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆம் திகதிகளில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான முறையில் நடத்துவதை உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாக்களிப்பதற்காக சுமார் 90 ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும் வன்முறையை ஏற்படுத்த கூடியவாறு சமூக வலைதளம் உள்ளிட்ட வேறு வழிகளில் போலி செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
CATEGORIES இந்தியா
