கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட Methamphetamine – இந்த வாரத்திற்குள் ஆய்வறிக்கை வௌியிடப்படும்

கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட Methamphetamine – இந்த வாரத்திற்குள் ஆய்வறிக்கை வௌியிடப்படும்

கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் Methamphetamine என சந்தேகிக்கப்படும் இரசாயனப்பொருள் தொடர்பான ஆய்வறிக்கை, இந்த வாரத்திற்குள் வௌியிடப்படுமென தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த இரசாயனப்பொருள் தொடர்பில் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மித்தெனிய மற்றும் தங்காலை – நெடோல்பிட்டிய பகுதிகளில் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் Methamphetamine எனப்படும் ஐஸ் போதைப்பொருள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்தது.

வெலிகம பகுதியில் மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருள் Mephedrone எனப்படும் அபாயகர விஷத்தன்மையுடன் கூடிய போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share This