மின்சாரக் கட்டண அதிகரிப்பு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

மின்சாரக் கட்டண அதிகரிப்பு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு
குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இறுதி முடிவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கான பொது ஆலோசனை செயன்முறை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மாதம் 08 ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனையின் இறுதி அமர்வு நடைபெற்ற பின்னர், கட்டணங்களைத் திருத்துவது
குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத் திருத்தத்தில் மின்சாரச் சட்டம் மற்றும் மின்சாரக் கட்டண விலை சூத்திரம் பின்பற்றப்படும்.

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மின்சார சபை 1,769 மில்லியன் ரூபா இழப்பீட்டை பதிவு செய்துள்ளது.

Share This