பலத்த மின்னல் தாக்கம் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை, இன்று (04) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை மற்றும்
பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

Share This