காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடத்தியவர்களே அதனை எதிர்க்கின்றனர் – சந்திரசேகர்

மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சங்கானையில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் இன்றையதினம் (03) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மன்னார் காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடத்தியவர்கள், காற்றாலைகளுக்கு பின்னால் ஓடியவர்கள், அந்த காற்றாலை கம்பனிகளுகளிடம் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டவர்கள் முன்னைய அரசியல்வாதிகள்.
அந்த அரசியல்வாதிகள் தான் இப்போது இந்த போராட்டத்தின் பின்னால் இருக்கின்றனர்.
இது மக்களது பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், இது மன்னாருடைய பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், இந்த பிரச்சினையால் மன்னார் மூழ்குமாக இருந்தால் அது பற்றி வேதனை அடைபவர்கள், அதனை தடுத்து நிறுத்துபவர்கள் வேறு யாருமல்ல நாங்கள் தான்.
அதனால் இந்த காற்றாலை சம்பந்தமான பிரச்சினைக்கு மக்களுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம்” என்றார்.