“பியுமாவை” விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

“பியுமாவை” விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என கூறப்படும் “பியுமா” எனப்படும் பியூம் ஹஸ்திகாவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்தி குமார பிறப்பித்தார்.

சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபரை ஒக்டோவர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு சலிந்து”வின் நெருங்கிய கூட்டாளி என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பல கடுமையான குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Share This