காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு

காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டத்தை செயல்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார்.
20 அம்சத் திட்டம் வெளியிடப்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவை எட்டியுள்ளார்.
அதன்படி, புதிய அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் உடன்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி, ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இஸ்ரேல் எடுக்கும் இராணுவ நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
காசா பகுதிக்கான அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்த புதிய அமைதித் திட்டத்தில் காசா பகுதியில் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட 20 பணயக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல் உள்ளிட்ட 20 அம்சங்கள் உள்ளடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.