மனைவிக்கு ஜீவனாம்சமாக சில்லறைகளை கொடுத்த கணவன்
![மனைவிக்கு ஜீவனாம்சமாக சில்லறைகளை கொடுத்த கணவன் மனைவிக்கு ஜீவனாம்சமாக சில்லறைகளை கொடுத்த கணவன்](https://oruvan.com/wp-content/uploads/2024/12/Collaborative-vs-Litigated-Divorce.jpg)
கேவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பிலான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனைவி தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என அதே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி ரூபாய் இரண்டு லட்சத்தை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, முதற்கட்டமாக ரூபாய் 80,000 தொகையை பணத் தாள்களாக வழங்காமல் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் என நாணயங்களாக இருபது பைகளில் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளார் கணவர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, இவ்வாறு நாணயங்களாக வழங்கக் கூடாது. இதனை தாள்களாக மாற்றிக் கொடுங்கள் என்றார்.
அதன் பின்னர் அதனை தாள்களாக மாற்றிக் கொடுத்துள்ளார் அந் நபர்.