இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுச்சேரி மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படை கைது செய்துள்ளது
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீன்பிடி விசை படகையும் அதில் இருந்த 12 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்கள் 12 பேரையும் படகுடன் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்