சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி – 2025 ஆசிய கிண்ண டி20 தொடர்

சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி – 2025 ஆசிய கிண்ண டி20 தொடர்

2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று (27.09) இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பில் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 61 ஓட்டங்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில், மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் சானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை 202 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமனிலையில் நிறைவடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க 107 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

குசல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி, சூப்பர் ஓவரில் இலங்கை அணி 02 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இந்திய அணி 03 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிப் பெற்றது.

Share This