தாளையடி கடற்கரைக்கு வருபவர்கள் அவதானம்-பலத்த காற்று வீசுகின்றது

தாளையடி கடற்கரைக்கு வருபவர்கள் அவதானம்-பலத்த காற்று வீசுகின்றது

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன்,அதில் சிலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள்

தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அதிகளவான காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது

ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடற்கரைக்குள் இறங்க வேண்டாம் என அப்பகுதி மீனவர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தாளையடி கடற்கரைக்கு வருகை தந்த சுற்றுலாவாசி ஒருவர் கடலில் நீராடும் போது உயிரிழந்தமை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This