மெல்சிரிபுர விபத்து – ரணில் மற்றும் மகிந்த இரங்கல்

குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தேரர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இந்த உலகத்தின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர காட்டில் வளர்ந்த துறவிகள் புத்தர் போதித்த நிலையற்ற தன்மையை விளக்கச் சென்றதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தேரர்கள் தாங்கள் தேடிய நிர்வாணத்தை அடைய பிரார்த்திப்பதாக முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தச் துயர சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது ஆழ்ந்த வருத்தத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
“அந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளிநாட்டு துறவிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா, ரஷ்யா மற்றும் ருமேனியா நாடுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் ஆன்மீக இலக்குகளை அடைய பசுமையான மற்றும் அமைதியான சூழலில் தியானத்தில் ஈடுபட்ட மறைந்த தேரர்கள் உச்ச நிர்வாணத்தை அடைய பிரார்த்திக்கிறேன்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தேரர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்,” என்று மகிந்த ராஜபக்ச தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.