பணவீக்கம் அதிகரிப்பு

ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 1.5 வீதமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, பணவீக்கம் 0.7 வீதமாக ஆக காணப்பட்ட நிலையில், ஒகஸ்ட் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதனிடையே, உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 2.2 வீதமாக காணப்பட்ட நிலையில், ஒகஸ்ட் மாதத்தில் 2.9 வீதமாக அதிகரித்துள்ளது.
உணவு அல்லா பணவீக்கம் ஜூலையில் -0.6 வீதமாக காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 0.4 வீதமாக ஆக அதிகரித்துள்ளது.