H-1B விசா விவகாரம் – அமெரிக்காவில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சிக்கல்

H-1B விசா விவகாரம் – அமெரிக்காவில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சிக்கல்

அமெரிக்க ஜனாாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் எதிர்வரும் காலங்களி H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் தற்போதைய விசாவில் கற்கும் மாணவர்கள் தங்களது கற்கைநெறிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம். ஆனால் கற்கையை முடித்த பிறகு அவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கற்கையை நிறைவு செய்யும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை குறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share This