இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக ட்ரம்ப் பிரித்தானியாவில் கருத்து

இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக ட்ரம்ப் பிரித்தானியாவில் கருத்து

இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளதென்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் ஸ்டார்மருடன் இணைந்து ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.  இதன்போதே ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்,

“நான் இந்தியாவுக்கு அதிகளவில் வரிகளை விதித்துள்ளேன். உக்ரைனுடனான தற்போதைய மோதலில் புடின் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளார்.

மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தால், புடின் போரை விட்டு வெளியேறிவிடுவார். அவருக்கு வேறு வழியில்லை.

சீனா தற்போது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய வரியை செலுத்துகிறது, ஆனால் நான் இன்னும் சில தடைகளையும் விதிக்க தயாராக இருக்கிறேன். எண்ணெய் மூலமான வருவாய் குறைந்தால், மிக எளிமையாக, ரஷ்யா இந்த போருக்கு தீர்வு காணும்.

நாங்கள் இதுவரை ஏழு மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தோம், அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கக்கூடியவை என்று முதலில் கருதப்படவில்லை. நாங்கள் இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தோம்.

அந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்தது முற்றிலும் வர்த்தகத்திற்காக மட்டுமே. அவர்கள் கடுமையாக மோதிக்கொண்டிருந்தபோது, நீங்கள் எங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால், போரை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்” என்றார்.

Share This