பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ…ஐந்து பேர் பலி
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பெட்ரோல் கிடங்கு ஒன்றில் பெட்ரோல் நிரப்புவதற்காக சுமார் 40 இற்கும் அதிகமான லொறிகள் நிறுத்தப்பட்டிருந்த போது திடீரென ஒரு டேங்கர் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இத் தீ அங்கிருந்த லொறிகளில் பரவி கரும்புகை சூழ்ந்துகொண்டது.
இவ் விபத்தினால் பெட்ரோல் கிடங்கில் பணியில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் பலர் பலியாகியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.