கனடாவில் மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவு – “No Desk Dining Zone” திட்டம் அறிமுகம்

கனடாவில் தற்போது மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
ஃபாக்டர் கனடா (Factor Canada) நடத்திய கருத்துக்கணிப்பின்படி 61% ஆனோர் மதிய உணவை முற்றிலுமாக தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐந்தில் இருவர் தங்களது மேசையிலேயே சாப்பிடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை மாற்றும் நோக்கில், Factor நிறுவனம் ஒரு புதிய சமூக முயற்சியாக “No Desk Dining Zone” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், பணியாளர்கள் திரைகளில் இருந்து (computers, phones) சிறிது நேரம் விலகி, உண்மையான இடைவேளையின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்வதற்கான வாய்ப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, டொராண்டோவில் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில், சமையற்காரர்கள் தயாரிக்கும் இலவச உணவுகள்,உற்சாகமான இசை,வெளிப்புற அமர்வுகள் விளையாட்டுகள் மற்றும் சக ஊழியர்களுடன் மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த முயற்சி, வேலைசூழலில் ஆரோக்கிய கலாச்சாரத்தை உருவாக்கும் ஒரு சிறந்த பரிந்துரையாக அமையும் என்று அமைப்பாளர்கள் நம்புகின்றனர்.
