21 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

21 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் இன்று
ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தில் பணிபுரியும் 54 வயதுடையதான ஊழியரே
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள் வெளியேறும் பகுதியில், குறித்த நபர் அவருடைய காலுறையில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share This